Print this page

“சு.கவில் பலர் அன்னத்துக்கு ஆதரவு”

November 01, 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தெரிவித்துள்ளார்.

அதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அவர்கள், அன்னத்துக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். விரைவில் இணைந்துகொள்வர் என்றார்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.