Print this page

மடகஸ்கார் விபத்தில் இலங்கையர் மூவர் பலி

November 03, 2019
 
மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

கார் ஒன்று கங்கை ஒன்றில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மடகஸ்கார், என்டனநாரியோ நகரின் கிளை வீதியொன்றில் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த காரில் பயணம் செய்த மூன்று இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மடகஸ்கர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சீசெல்ஸ் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

சீசெல்ஸ் உயர்ஸ்தானிகரக அதிகாரிகளின் தலையீட்டில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.