Print this page

நானல்ல மஹிந்தவே சீரழித்தார்- மைத்திரிக்கு சந்திரிகா காட்டம்

November 04, 2019

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியியை சீரழித்தது நானல்ல, புதியக் கட்சியை உருவாக்கி மஹிந்த ராஜபக்ஷவே சீரழித்தார் என முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் போஷகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

தனக்கு எதிராக, எவ்விதமான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது. எனக்கு எதிராக விசாரணைகளையும் நடத்த முடியாது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மிகவும் காட்டமான அந்தக் கடிதத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சுதந்திரக் கட்சிக்கு இழைத்த தீங்குகளை குறிப்பிட்டுள்ளார். 

Last modified on Wednesday, 06 November 2019 02:45