Print this page

புத்தர் சிலை உடைப்பு- இவரை கண்டால் அறிவியுங்கள்

November 06, 2019

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பு  சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த மாலைதீவு பிரஜை ஒருவரை கைதுசெய்வதற்கு, பொதுமக்களின் உதவியை பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.

சந்தேக நபருடைய மாதிரி உருவத்துடன் கூடிய புகைப்படமொன்றை  பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. 

இவரை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மாலைதீவு சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், 0112-326936 என்ற, குற்ற விசாரணை திணைக்களத்தின் தொலைபேசி இலக்கம் மற்றும் 0718591774 என்ற, பொறுப்பதிகாரியின் கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தெரிவிக்க முடியும்.