Print this page

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் கைது

வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் ஆறு பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுரத்தல் என அறியப்படும் சமீர பெரேரா ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நேற்று பிற்பகல் ஹிம்புட்டான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொரு உதவியாளரான வெலி ரொஹா உள்ளிட்ட ஐவர் வெள்ளம்பிட்டிய பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த அவர்கள், மணல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.