Print this page

சஜித்தின் துணைவியார்- மன்னார் ஆயருடன் சந்திப்பு

November 06, 2019

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் துணைவியார், மன்னார் ஆயர் இல்லத்திற்கு சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்தார்.

இதன் போது கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்கா, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரும் சென்று மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.