Print this page

30ஆம் திகதி முதல் உத்தரதேவி ரயில் சேவை

இரட்டை வலுகொண்ட ரயில் எஞ்சின் தொகுதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த ரயிலின் பரீட்சார்த்த பயணம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 6 மணிக்கு போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் குறித்து ரயில் நாளாந்தம் முற்பகல் 10.45க்கு கொழும்பிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்க உள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் இரட்டை வலுகொண்ட 5 ரயில் தொகுதிகளை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், சீனாவிலிருந்தும் இரட்டை வலுகொண்ட ரயில் தொகுதி ஒன்று கொள்வனவு செய்யப்பட உள்ளது.

ரயில் திணைக்கள முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.