Print this page

மைத்திரி அதிரடி- தயாசிறியின் பதவி பறிபோகும்

November 11, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு நிலவுவதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறியை நீக்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அந்தத தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கோத்தாபயவின் வெற்றிக்காக ஜனாதிபதி நூற்றுக்கு நூறு வீதம் ஆதரவு வழங்குகின்றார்” என ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிரி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்தத் தேர்தலில் தான் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், தயாசிறியின் இவ்வாறான அறிவிப்பினால்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான கோபம் அடைந்துள்ளதாக அறிமுடிகிறது.  

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரையில் கட்சியின் தலைவர் பதவியையும் பேராசிரியர் ரொஹான் லக்ஷ்மன் பியதாசாவிடம் தற்காலிகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Monday, 11 November 2019 02:20