Print this page

மைத்திரிக்கு இன்று பிரியாவிடை

November 11, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கும் இறுதி அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) நடைபெறவுள்ளது.

வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் நடைபெறும். எனினும், நாளை போயாதினம் என்பதனால், அந்தக் கூட்டத்தை இன்று(11) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரியாவிடை வைபவமொன்றும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இன்று (11) நடைபெறவுள்ளது. இந்த அமர்வு, இன்று முற்பகல் 11.30க்கு ஆரம்பமாகி 2.30க்கு நிறைவடையும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இறுதியாக நடைபெறும் பாராளுமன்ற அமர்வு இதுவாகும். அதன்பின்னர், டிசெம்பர் 3ஆம் திகதியே சபை அமர்வு ஆரம்பமாகும்.