Print this page

நானே கோத்தாவின் வெள்ளை வேன் சாரதி

November 11, 2019

கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது, வெள்ளைவான் பயம் ஆட்கொண்டிருந்தது. அந்த வெள்ளைவானில், ஆட்களை கடத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வெள்ளைவான் சாரதியாக நானே கடமையாற்றினேன் என நபரொருவர், கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து கொழும்பில் நேற்று (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தன்னை அந்தனி டக்ளஸ் பயர் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

வெள்ளைவான் தொடர்பில் தெரிவிப்பதற்கு பல இடங்களுக்குச் சென்றிருந்தேன். எனினும், யாரும் தனக்கு உதவவில்லை. இப்போது ராஜித்த சேனாரத்ன உதவியுள்ளார்.

வெள்ளை வானில் கடத்தப்படும் நபர்களில், முதலாவதாக பற்கள் கழற்றப்படும். நகங்கள் பிடுங்கப்படும். கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச்செய்யப்படுவார். 

அதன்பின்னர், அந்த நபரின் வயிறு வெட்டப்பட்டு, அவருடைய உடல், முதலைக்கு உணவாக கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பிரபாகரனின் பணத்தை கொழும்புக்கு நானே கொண்டு வந்தேன். எனினும், அதற்காக எனக்கு பணம் கொடுக்கவில்லை. அதனை கேட்டதற்காக, நான் கடத்தப்பட்டேன். 

 

இந்த வெள்ளைவான் விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கு தான் ஒத்துழைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் வந்தால், மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். 

Last modified on Wednesday, 13 November 2019 02:30