Print this page

மனித முகத்துடன் மீன்

November 12, 2019

 சீனாவின் தென் பகுதியிலுள்ள நகரான கன்மிங்குக்கு அருகில் உள்ள ஒரு ஏரியில் இருக்கும் மனித முக சாயலை கொண்ட வினோத மீன் குறித்த காணொளி தற்போது தீவிரமாக பரவிவருகின்றது. சுற்றுலாப்பயணி ஒருவர் தற்செயலாக அங்கிருந்த ஏரியை காணொளி பதிவு செய்தபோது, அவரது அவரது கமராவில் இந்த வினோத மீன் பதிவாகியிருந்தது.

ஏரியின் விளிம்பில் நீந்திய அந்த மீன் சிறிது நொடிகள் தலையை உயர்த்தியதை அவர் கண்டுள்ளார்.

மீனின் தலையில் இரண்டு கண்கள் போல தோற்றமளிக்கும் இருண்ட புள்ளிகள் மூக்கின் பக்கங்களை ஒத்த இரண்டு செங்குத்து கோடுகள் மற்றும் வாய் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த ஒரு கிடைமட்ட கோடு என மனித முகத்தை போலவே இது தோற்றமளிக்கின்றது