Print this page

விரைவில் கூடுகிறது பாராளுமன்றம்

November 18, 2019

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற அமர்வு, எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தெரிவுகள் குறித்து விரிவாக ஆராயப்படும்.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி, பராளுமன்ற அமர்வுகள் யாவும், டிசெம்பர் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.