Print this page

இந்தியாவுக்கே முதலில் கோத்தா விஜயம்

November 18, 2019

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உலக நாடுகளின் தலைவர்கள், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலாவதாக வாழ்த்து தெரிவித்தார்.

மாலைதீவு ஜனாதிபதி, பாகிஸ்தான் ஜனாதிபதியும் வாழத்துகளை தெரிவித்தனர்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகமும் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு விஜயம் செய்வோன் என அறிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ,ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், தன்னுடைய முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்குச் செல்வார் என அறியமுடிகிறது.