Print this page

அண்ணனின் பிறந்தநாளில் ஜனாதிபதியாகிறார் தம்பி

November 18, 2019

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (18) பிறந்தநாள்.

அவருடைய பிறந்த நாளன்று, புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள், அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இன்றுக்காலை 10.30க்கு பதவியேற்பு வைபவம் இடம்பெறும். 

அதன் பின்னர், மத வழிபாடுகளில் அவர் ஈடுபடுவார். 

Last modified on Monday, 18 November 2019 01:54