Print this page

கோத்தாவிடம் முதலாவது இராஜினாமா கடிதம் கையளிப்பு

November 18, 2019

 புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள, இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம், முதலாவது இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணம் மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவே, தன்னுடைய இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

மக்கள் ஆணைக்கு தலைவணங்கி, அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக, இராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 19 November 2019 07:10