Print this page

ஒரேஞ் நிறம் தமிழர்கள்-பச்சை நிறம் முஸ்லிம்கள்

November 18, 2019

 

ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார்.

அரச அலுவலகங்களில் இனிமேல் தனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த இலட்சினையில், நான்கு மூலைகளும் பௌத்தம் மற்றும் தேசத்தின் செல்வாக்கைக் குறிக்கின்றன. இது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய உத்தனா சம்பதா , ஆரக்கா சம்பதா , கல்யாண சம்பதா மற்றும் சாம ஜீவிதா ஆகிய நான்கு பௌத்த சிந்தனைகளை சித்தரிக்கிறது:

நான்கு மூலைகளிலும் உள்ள நான்கு குறியீடுகள் சர்வதேச உறவுகளையும் விருந்தோம்பலையும் குறிக்கின்றன. ஒரேஞ் நிறம் தமிழ் மக்களையும் பச்சை நிறம் முஸ்லிம் சமூகத்தையும் குறிக்கிறது.

இலட்சினையை சுற்றியிருக்கும் நான்கு அடி அகலமுள்ள வெள்ளை கோடுகள் அனைத்து திசைகளின் பாதுகாப்பையும் குறிக்கிறது.

சமமாக உள்ள மஞ்சள் துண்டு ஒற்றுமையையும், இன நல்லிணக்கத்தின் ஒற்றுமையையும் குறிக்கிறது.மஞ்சள் என்பது வாழ்க்கையின் உயிர்ச்சக்தியைக் குறிக்கிறது.