Print this page

கோத்தாவின் அறிவிப்பால், மைத்திரி, ரணில் திக்குமுக்கு

November 18, 2019

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கோத்தாபய ராஜபக்ஷ, தன்னு கொள்கையை முன்னெடுத்து செல்லும் வகையில் புதிய அரசாங்கமொன்றை அமைக்கப்போவதாக அறிவித்தார்.

இதனால், கொழும்பு அரசியல் இன்னும் சூடுபிடித்துள்ளது. கோத்தாவின் இந்த அறிவிப்பினால், அமைச்சர்கள் பலர் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளனர்.

தமது அமைச்சு அலுவலகங்களுக்கு இன்று சென்று, அவர்கள், ஆவணங்கள் மற்றும் தமக்குரிய உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறத் தயாராகி வருகின்றனர் என அறியமுடிந்தது.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்றரவு 7 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் அவரது இல்லத்தில் நடக்கவுள்ளது.

பாராளுமன்ற தேர்தலொன்று வரவுள்ள சூழல் குறித்தும் அப்படி வருமாயின் போட்டியிடுவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படவுள்ளது.

இதற்கிடையில் ஆளுங்கட்சியின் முக்கியமான கூட்டமொன்று இன்று மாலை பிரதமர் ரணில் தலைமையில்  நடக்கவுள்ளது .

பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வது குறித்து இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.