Print this page

அரசியல் நடுக்கத்தால் நட்சத்திர ஹோட்டலில் மந்திராலோசனை

November 18, 2019

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள சஜித் பிறேமதாஸ ஆகியோர் தற்போது கொழும்பிலுள்ள ஹோட்டலில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.

பேச்சுவார்த்தை இடம்பெறும் சுற்றுவட்டத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகளோ அன்றில் ஹோட்டல் ஊழியர்களோ அனுமதிக்கப்படவில்லை என அறியக்கிடைப்பதுடன், இவர்கள் கோத்தபாய அரசுடன் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதற்கான முன்மொழிவொன்றை செய்வதற்கே இவ்வாறு அவசரமாக கூடியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

தமிழ் மக்களுக்கான கதவுகள் எப்போதும், மஹிந்த அரசில் திறந்திருந்தபோதும் அதனை தட்;டிக்களித்துவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு தனது அரசில் இடமில்லையென புதிய அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அடிப்படைவாதிகளுடன் கூட்டுச்சேர்ந்து தமிழ் மக்களுக்கு புதியதோர் சிக்கலை உருவாக்க சுமந்திரன் முனைவது மிகவும் கண்டனத்திற்குரியதாகுமென ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.