Print this page

ரணில் மீது அனுரவுக்கு புது சந்தேகம்

November 20, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தனது வாக்கை பயன்படுத்தினாரா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளாரும், ஜே.வி.பியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். 

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது வாக்கை பயன்படுத்திய, ரணில் விக்கிரமசிங்க, வாக்குச்சீட்டில் மேலேயே இருந்த சின்னமொன்றுக்கே தனது வாக்கை அளித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

புதிய ஜனநாயகக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, பிரதமர் ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள், கடுமையான சூழ்ச்சிகளை மேற்கொண்டனர் என்றக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே, அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.