Print this page

காத்தான்குடியில் புது மாற்றம்

November 20, 2019

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் புதுவகையான மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடியில், மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர், ஹெல்மட் பயன்படுத்துவதில்லை. எனினும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அதுதொடர்பிலான கவனத்தை செலுத்தியுள்ளனர். 

நீண்டகாலமாகவே அவர்கள், ஹெல்மட் அணிவதில்லை. இந்நிலையிலேயே, புதிதாக ஹெல்மட்டுகளை கொள்வனவு செய்து, அங்குள்ளவர்கள் அணியத் தொடங்கியுள்ளனர். 

ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரை, போக்குவரத்து பொலிஸாரினால் கூட கட்டுப்படுத்த முடியாத காலமொன்று இருந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.