Print this page

துறந்தார் ரணில்- 4 மணிக்கு உரை

November 20, 2019

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்ததை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியுள்ளார்.

அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், 16க்கும் குறைவாக உறுப்பினர்களை கொண்ட  காபந்து அரசாங்கம் அமைக்கப்படும்.