Print this page

ஜனாதிபதி அனுப்பிய பெயர் மீண்டும் நிராகரிப்பு

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பிவைக்கப்பட்ட பெயர் அடங்கிய யோசனை, அரசியலமைப்பு சபையினால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில், கூடிய அரசியலமைப்பு சபையில், சகல உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

ஜனாதிபதியால் இன்றைக்கு இருவார காலத்துக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்ட அந்தப் பெயர் நிராகரிக்கப்பட்டது. அதே பெயரே மீண்டும் அனுபிப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனையும் அரசியலமைப்பு சபை நிராகரித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜயசுந்தரவை, அந்த நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.