Print this page

‘நாளை வரை நீ- நாளை முதல் நான்’

November 20, 2019

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குள் உட்பூசல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபந்து அரசாங்கத்தில், பெரமுனவின் மூத்த உறுப்பினர் தினேஷ் குணவர்தனவே பிரதமராக பதவியேற்பார் என ஏற்கெனவே, தகவல்கள் ​வெளியாகியிருந்தன.

எனினும், நாளை (21) பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறும், புதிய அமைச்சரவையில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராபக்ஷவே பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றது.

ஆனால், முக்கியமான பொறுப்பு, தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்பட உள்ளது என அறியமுடிகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இன்று (20) அறிவித்தார்.

இராஜனாமா கடிதத்தை, நாளை (21) அனுப்பிவைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த படம், “நாளை வரை நீ- நாளை முதல் நான்’ என்ற அர்த்தம் கற்பிக்கிறதோ, என தோன்றுகிறது.