Print this page

அரசியல் கசந்தது- மண்வெட்டி ஏந்தினார் எம்.பி

November 21, 2019

புதிய ஜனாதிபதி கோத்தாபயவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம, அரசியலிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெறபோவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தன்னுடைய தரப்பு விடுத்திருந்த அறிவிப்பு வெற்றியடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

ஜனாதிபதி கோத்தாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளை, மக்களின் ஆணைக்கு தலைவணங்குகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தான், விலகவில்லை என்றும், வேறெந்த கட்சியிலும் இணைந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விவசாயம் செய்யப்போகிறேன் என்றார்.