Print this page

3 ஆளுநர்களுக்கு முதல் சுற்றில் வாய்ப்பில்லை

November 21, 2019

 

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களும் தங்களுடைய பதவியை இராஜினாமா செய்துவிட்டனர்.

அந்த வெற்றிடங்கள் இன்றுகாலை நிரப்பப்பட்டது. அதனடிப்படையில், ஆறுமாகாணங்களுக்கான ஆளுநர்கள் மட்டுமே முதல் சுற்றில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய ஆகிய மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லை.

மேல் மாகாணம்- வைத்தியர் சீதா அரம்பேபொல,

மத்திய மாகாணம்- லலித் யூ கமகே,

ஊவா மாகாணம்- ராஜா கொல்லுரே,

தென் மாகாணம்- விலி கமகே

வடமேல் மாகாணம்- ஏ.ஜே.எம். முஸம்மில்

சப்ரகமுவ மாகாண ஆளுநர்- டிக்கிரி கொப்பேகடுவ