Print this page

திடீரென விழித்தார் கம்பன்பில

November 22, 2019

 

காபந்து அரசாங்கத்தில், உதய கம்பன்பிலவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாமை தொடர்பில், பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, விளக்க​மொன்றை கொடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.  

காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்பதில்லை​ என நான், ஏற்கனவே தீர்மானித்துவிட்டேன்.

ஜனாதிபதித் ​தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய குழுவில், அமைச்சர் பதவியை எதிர்ப்பார்த்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எட்டுபேர் இருக்கின்றர்.

மாவட்ட தலைவர்கள் பல பேரும், அமைச்சரவை பதவியை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

10 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதற்கே முதலில் தீர்மானிக்கப்பட்டது. அதனையும் 15இல் மட்டுப்படுத்துவதற்கு, கடும் கஸ்டமானது.

அதனடிபடையில், அமைச்சரவையை உருவாக்குவது, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பெரும் நெருக்கடியான நிலைமையாகும். அதனை கருத்தில் கொண்டு, இந்த காபந்து அரசாங்கம், எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதியுடன் நிறைவடைந்து விடும் என்பதனாலும், அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்தேன் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.