Print this page

நாற்காலி, பைபில் வீசி​யோர் அமைச்சரவையில்…

November 22, 2019

 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை தொடர்பிலான விமர்சனங்கள், புகைப்படங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த அமைச்சரவையில், தமிழர்களாக ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்த ஆகியோர் உள்ளடங்குகின்றர்.

அமைச்சரவையில் என்றுமே அங்கம் வகிக்காத, வைத்தியர் ரொமேஸ் பத்திரண, பிரசன்ன ரணதுங்க ஆகிய இருவரும் அங்கம் வ​கித்துள்ளனர்.

2018 ஒக்டோபர் 18ஆம் திகதியன்று இடம்பெற்ற, ஆட்சி மாற்றத்தின் போது பாராளுமன்றத்தில் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கப்பட்டது. அப்போது, ஏற்பட்ட பிரச்சினையில், 21 பேருக்கும் மேற்​பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. எனினும், எவருமே நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், சபாநாயகரை நோக்கி க​திரைய வீசியவர், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அவர் புதிய அமைச்சரவையில் வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, சபாநாயகரை நோக்கி, பைபிலை வீசிய விமல் வீரவன்ச, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவம். அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த சம்பவத்துடன் கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.