Print this page

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை

November 22, 2019

 

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது.

சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.