Print this page

புருஷனை கொன்று.. கிச்சனில் புதைத்து.. சமையல் செய்த மனைவி

November 23, 2019


கட்டின புருஷனை கொன்று.. சடலத்தை கிச்சனில் புதைத்து விட்டு.. அதன் மீது ஏறி நின்று ஒரு மாசமாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார் "பாசக்கார" மனைவி!

மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

அனுப்பூர் மாவட்ட பகுதியில், கரோண்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் மகேஷ் பன்வால்.. இவர் ஒரு வக்கீல் ஆவார்! இவரது மனைவி பிரமிளா.. 35 வயதாகிறது!

இந்நிலையில், போன மாசம் மகேஷை காணவில்லை என்று பிரமிளா போலீசில் புகார் தந்தார். ஆனால், தன் தம்பி காணாமல் போனதில் பிரமிளா மீதுதான் சந்தேகமாக உள்ளதாக மகேஷின் அண்ணன் அர்ஜூன் இன்னொரு புகாரை போலீசில் தந்தார்.

எப்பவெல்லாம் தம்பியை பார்க்க வீட்டுக்கு போறோமோ, அப்போதெல்லாம் பிரமிளா பேச்சை மாற்றிவிடுவாராம்.. வீட்டுக்குள்ளேயே தங்களை விடுவதில்லை என்றும் அர்ஜுன் போலீசில் சொன்னார். இதனால் போலீசாருக்கு பிரமிளா மீதுதான் அதிக சந்தேகம் வந்தது..

அதனால் நேரடியாக அந்த வீட்டுக்குள் சென்றனர். உள்ளே நுழைந்ததுமே குப்பென்று பிணவாடை அடித்ததும் போலீசார் அதிர்ந்துவிட்டனர். அதனால் வீடு முழுக்க அலசி ஆராய்ந்தனர்.. ஒரு இடம் விடாமல் அங்குல அங்குலமாக சோதனை நடந்தது.

அப்போதுதான், கிச்சனில் மகேஷின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இப்போது போலீசாரின் விசாரணை பிடியில் வசமாக சிக்கினார் பிரமிளா... காரணம் கள்ளக்காதல்தான்!

"எனக்கு கங்காராம் என்பவருடன் உறவு ஏற்பட்டது. இது என் கணவர் மகேஷுக்கு தெரிந்துவிட்டது. அதனால் கங்காராமுடன் சேர்ந்து என் கணவரை கொன்று கிச்சனிலேயே புதைத்து விட்டோம்.

சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக காணாமல் போனதாக ஸ்டேஷனிலும் ஒரு புகார் தந்தோம். ஒரு மாசமாக இந்த கிச்சனில்தான் நான் சமையல் வேலை பார்த்து வருகிறேன்" என்றார். ஆனால் கங்காராம் இதனை மறுத்துள்ளாராம். எனினும் பிரமிளாவிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

Last modified on Saturday, 23 November 2019 10:18