Print this page

9 மண்டை ஓடுகளையும் மீளப்பெற்றார் வேடுவ தலைவன்

November 24, 2019

பிரித்தானியாவின் எடின்பர்க் பல்கலைகழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்பது மண்டை ஓடுகளை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மண்டையோடுகள் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டையோடுகள், பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் உடற்கூற்றியல் ஆய்வாளர்களாலும் ஜேர்மனியில் அமைந்துள்ள மனித வரலாற்று விஞ்ஞானத்துக்கான மக்ஸ் ப்ளாங்க் நிறுவகத்தின் ஆய்வாளர்களாலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வேடுவ இனத்தவர்களே இலங்கையின் பழங்குடி மக்கள் என கருதப்படுவதால் அந்த ஒன்பது மண்டை ஓடுகளையும் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோவிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மண்டை ஓடுகளை பெற அவர் பிரித்தானியாவிற்கு சென்று அங்கு எடின்பர்க் பல்கலைகழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில் ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னில எத்தோவை வரவேற்பதில் பெருமை கொள்வதாகவும்அவர்களுக்கு உரித்தான மனித எச்சங்கள் அவர்களிடம் மீள கையளிக்கப்படும் எனவும் எடின்பர்க் பல்கலைகழககம் தெரிவித்துள்ளது.

Last modified on Sunday, 24 November 2019 02:39