Print this page

வியாழேந்திரன், அங்கஜனுக்கு நாளை பதவிகள்

November 24, 2019

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நாளை திங்கட்கிழமை 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மட்டக்களப்பு, யாழ் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 15 பேரடங்கிய அமைச்சரவை, கடந்த வெள்ளிகிழமை நியமிக்கப்பட்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது.