Print this page

தமிழ் சேதம்- அதிரடி உத்தரவிட்டார் மஹிந்த

November 24, 2019

நாட்டின் சில இடங்களில் வீதிகளில் உள்ள தமிழ் பெயப்பலகைகளை இனந்தெரியாத நபர்கள் சேதம் விளைவித்தமை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பு உயர்மட்டங்களுக்கு உத்தரவிட்டார்.

பாணந்துறையில் இடம்பெற்ற சேதம் தொடர்பில் அந்த நகரசபையின் தலைவருடன் பிரதமர் நேரடியாக தொலைபேசி மூலம் உரையாடியதுடன் உடனடியாக அதனை சரிசெய்யுமாறு பணித்துள்ளார்.

அதேபோல் வத்தளை, கெரவலப்பிட்டியவில் இடம்பெற்ற பெயர்ப்பலகை சேதம் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸ் அப்பகுதியில் உள்ள சி சி ரி வி கேமராக்களை கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.

இதன் பிரகாரம் இன முறுகல் ஏற்படும் வகையில் செயற்படும் எவராயினும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Last modified on Sunday, 24 November 2019 21:30