Print this page

தினேஷ், மஹிந்தவுக்கு முக்கிய பதவிகள்

November 24, 2019

அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் மஹிந்த அமரவீரவுக்கு, பாராளுமன்றத்தில் முக்கியப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அதனடிப்படையில், அமைச்சர் தினேஷ் குணவர்தன, சபைமுதல்வராகவும், அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்தில் தொடர்ச்சியாக இழுப்பறியான நிலைமை காணப்படுவதனால், எதிர்க்கட்சி பிரதம கொறடாவை நியமிப்பதில், சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என, பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.