Print this page

அமைச்சரவையில் சிக்கல்-பதவியேற்பு ஒத்திவைப்பு

November 24, 2019

புதிய அமைச்சரவையில், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகளை அடுத்து, பதவியேற்கும் நிகழ்வு நாளைக்கு (26) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, இன்று (25) இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, புதிய அமைச்சரவை பதவியேற்ற போது, எதிர்வரும் திங்கட்கிழமை (25) புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பர் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

புதிய அமைச்சரவையில்,இராஜாங்க அமைச்சர்கள் 20 பேரும், பிரதியமைச்சர்கள் 10 பேரும் உள்வாங்கப்படவிருந்தனர்.

எனினும், இராஜாங்க அமைச்சர்களாக யார்? யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதனையடுத்தே, இன்றைய பதவிப்பிரமாணம், நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.