Print this page

704 சி.ஐ.டியினருக்கு பொலிஸ் வலை

November 25, 2019

 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இன்ஸ்பெக்டர் நிஷாந்த உரிய அனுமதியின்றி நாட்டைவிட்டு எவ்வாறு வெளியேறினார் என்பது குறித்து உடனடி விசாரணைகளை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினை பணித்துள்ளார்.

இதேவேளை உரிய அறிவித்தல் இன்றி வெளிநாடு செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் உடனடி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதற்கமைய சி.ஐ டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் 704 பேரின் பெயர் விபரங்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள கருமபீடத்தில் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ் திணைக்களத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதன்படி தடுத்து நிறுத்தப்படுவார்களென சொல்லபப்டுகிறது.

Last modified on Tuesday, 26 November 2019 04:57