Print this page

அந்த 30 புதுமுகங்களை நாளை தெரியும்

November 26, 2019

புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நாளை (27) முற்பகல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

சுமார் 30 க்கும் கீழ் பட்டோர் பதவியேற்க உள்ளனர். இதில் பலர் புதுமுகங்கள் என தகவல்கள் தெரவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர்கள் 20 பேரம், பிரதியமைச்சர்களான 10 பேரும் பதவியேற்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைவாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்ற பின்னர் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 26 November 2019 16:22