Print this page

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் கரு அதிரடி

November 27, 2019

 

பாராளுமன்ற சம்பிரதாயத்தின் பிரகாரம், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரையே, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்வேன் என, சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும்போது, இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சம்பிரதாயத்தை மீறி செயற்படமுடியாது என்றும் அவர் தனது டுவிற்றரில் பதவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பில், ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமாயின், கட்சிக்குள்ளே தீர்த்துவைத்து கொள்ளவேண்டும் என்றும் அவர் தனது டுவிற்றரில் குறிப்பிட்டுள்ளார்.