Print this page

தடுமாறியது யாழ்தேவி

November 27, 2019

யாழ்தேவி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்திலிருந்து தடம்மாறி தடம்புரண்டுவிட்டது. இதனால், வடக்குக்கான ரயில் சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன என ரயில்​வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை வரையிலும் பயணித்தை மேற்கொண்டிருந்த யாழ்தேவி, அநுராதபுரம் கல்கமுவ ரயில் நிலையத்துக்கு அருகில், தடம்புரண்டது.

இதனால், தண்டவாளங்களுக்கும் சிலிப்பர் கட்டைகளுக்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஐந்து பெட்டிகள், தண்டவாளத்திலிருந்து புரண்டுவிட்டன. சம்பவத்தில் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் மட்டு​மே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.