Print this page

மஹிந்தவுக்கு ஜி.எல். ஆலோசனை

November 27, 2019

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின், வெளிநாட்டு விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, மேற்கண்ட நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்,  2010ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரையிலும் வெளிவிவகார அமைச்சராக பதவிவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.