Print this page

மாவீரர்களுக்காக கண்ணீர் சிந்திய இருவர் கைது

November 28, 2019

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர்கள் இருவர் பொகவந்தலாவை பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை டின்சின் நகரத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் துண்டுப்பிரசுரங்களை பிரதியெடுத்து இவர்கள் விநியோகம் செய்ததாகவும் ,அவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் பலவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.