Print this page

உயர்பதவிகள் தெரிவுக்கு அறுவர் கொண்ட குழு நியமனம்

November 28, 2019

அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியாதிக்க சபைகளுக்கான தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியானவர்களை தெரிவுசெய்வதற்காக ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

6 பேர் கொண்ட குறித்த குழுவை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) நியமித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரவை செயலாளர்  சுமித் அபேசிங்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சுசந்த ரத்நாயக்க, கலாநிதி நாலக கொடஹேவா, டயன் கோமஸ், கலாநிதி பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்குமாறு குறித்த குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.