Print this page

“ராஜித தப்பியோட முயற்சி”

November 29, 2019

கடந்த ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனாராத்ன, நாட்டைவிட்டு தப்பியோடுவதற்கு முயற்சித்துவருகிறார். சிங்கபூருக்கு செல்லும் அவர், அங்கிருந்து பிரிதொரு நாட்டுக்கு தப்பியோடுவதற்கு முயற்சித்து வருகின்றார் என, இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இருதய பிரச்சினைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நோக்கில், சிங்கபூருக்குச் செல்லும் அவர், அங்கிருந்து தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 29 November 2019 04:09