Print this page

முன்னாள் அமைச்சர்களின் பைல்கள் மஹிந்தவிடம் சிக்கின

December 01, 2019

“சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தில்”, அமைச்சர​வை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் கொடுக்கல், வாங்கல் தொடர்பிலான விவரங்கள் அடங்கிய கோவைகள் (பைல்கள்) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிக்கியுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையிலிருந்து வெளியேறியதன் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் அலரிமாளிகைக்குச் சென்றிருந்தார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த கோவைகளை, வேண்டுமென்றே கைவிட்டு சென்றுள்ளாரா? என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளன.

அந்த ​கோவைகள் உள்ள விவரங்கள் தொடர்பில், உண்மைத்தன்மையை கண்டறியமுடியாதுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகைக்கு வந்ததன் பின்னர், அங்கு சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்ளே, அந்த ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அது, வேண்டுமென்றை கைவிடப்பட்டு செல்லப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மிகவும், ஒழுங்கு முறையில், அந்த கோவைகள் இருப்பதனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வேண்டுமென்றே அந்த கோவைகளை விட்டுச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளன.

Last modified on Sunday, 01 December 2019 13:53