Print this page

அச்சில் ஏறியது வர்த்தமானி- பாராளுமன்றம் ஒத்திவைப்பு

December 02, 2019

பாராமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர், ஜனவரி 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படும். அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், இன்று நள்ளிரவு வெளியாகும்.

இதேவேளை, இந்த பாராளுமன்றம் மார்ச் 1ஆம் திகதி கலைக்கப்படும் என அறியமுடிகிறது.

ஜனாதிபதி தனதுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, மார்ச் மாதம் 1ஆம் திகதிக்குப் பின்னர், எப்போது வேண்டுமானாலும் பாராளுமன்றத்தை கலைத்து,பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கலாம். 

Last modified on Monday, 02 December 2019 15:55