Print this page

ரணிலா? சஜித்தா? வியாழன் முற்றுப்புள்ளி

December 03, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட கட்சிக்குள் எழுந்துள்ள பதவிப் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

அன்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்போது, இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடடத்தொகுதியில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.