Print this page

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

December 03, 2019

 நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கினை எதிர்வரும் வருடம் மே மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் மேலதிக நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் அறிவிக்குமாறு இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதிவாதிகள் 8 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.