Print this page

முரளி மறுத்தார் இருவர் ஆளுநர்களாக நியமனம்

December 04, 2019

வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முத்தையா முரளிரதன் மறுத்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, வெற்றிடமாக இருந்த ஏனைய இரண்டு மாகாண சபைகளுக்கான ஆளுநர்களும் நியமிக்கப்பட்டனர்.

வட மத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவும் ,கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் இன்று (04) பதவியேற்றனர்.