Print this page

ரஞ்சித் சொய்சாவின் பூதவுடல் கொண்டுவரப்பட்டது

December 05, 2019

சிங்கபூர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்த, ஐக்கிய தேசிய முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் பூதவுடல், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. 

சிங்கபூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு 9 மணியளவில் வந்தடைந்த யு.எல். 309 என்ற விமானத்திலேயே பூதவுடல் கொண்டுவரப்பட்டது.

 கடந்த ஜனாதிபதித் தேர்தலில்,அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பூதவுடலை அமைச்சர்களான பந்துல குணவர்தன, டலஸ் அழகபெரும தலைமையிலான குழுவினர் பொறுப்பேற்றனர்.

Last modified on Thursday, 05 December 2019 01:22