Print this page

ரணிலுக்கும் சஜித்துக்கும் அருகருகே ஆசனம்

December 06, 2019

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட சகல காரணங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக்கூட்டம், நடைபெற்றது. 

இதன்போது, எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை முன்மொழிவதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், கட்சியின் புதிய தலைவர் தொடர்பில் பின்னர் தீர்மானிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சி ஆசனம் சஜித் பிரேமதாஸவுக்கும், அவருக்கு அருகில், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.