Print this page

மொட்டு-கைக்கு இடையில் “சின்னம் சர்ச்சை”

December 08, 2019
அடுத்த பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், கடும் சர்ச்சை நிலவுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு கட்சிகளும் இணைந்து பொது நோக்கில் செயற்படவேண்டும் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். 
 
எனினும், ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் இணைந்து, பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னமான தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவேண்டும் என, பொதுஜன பெரமுனவினர் தெரிவிக்கின்றனர். 

எனினும், இரண்டு தரப்பினரும் கலந்துரையாடி, பொதுவான தீர்மானமொன்றை எட்டவேண்டும் என்றும் இருதரப்பினர் தரப்பிலிருந்தும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.  

Last modified on Tuesday, 10 December 2019 02:05